Kurukku Chiruthavale

Kurukku Chiruthavale

A.R. Rahman

Длительность: 6:42
Год: 1999
Скачать MP3

Текст песни

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோட தான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டுமரமும் பூக்கிறதே

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்தறியே
கொடிய விட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிரிச்சு பேசடியே
வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
விரல வெச்சு அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

அடி உம்போல செவப்பும் இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
உம் முதுக தொளைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழை அடிக்கும் சிறு பேச்சு
வெயில் அடிக்கும் ஒரு பார்வை
உடம்பு மண்ணில் புதையிற வரையில்
உடன் வர கூடுமோ

உசுர் என்னோட இருக்கையிலே
நீ மண்ணோடு போவதெங்கே
அட உன் சீவனில் நான் இல்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமைய்யா

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்குள் மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோட தான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டுமரமும் பூக்கிறதே

குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில்
உன்னை கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம்
மாத்துவேன்யா

ஓ-ஓ
ஓ-ஓ
ஆஹா-ஆ-ஆ
ஆஹா-ஆ-ஆ