Saarattu Vandiyila (From "Kaatru Veliyidai")

A. R. Reihana

Длительность: 4:52
Год: 2017
Скачать MP3

Текст песни

சரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்

அடி வெத்தல போட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு
நான் கொடுத்த கடனத் திருப்பிக்கொடுக்க சத்தியம் பண்ணிக்கொடு
என் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிசம்தான் ராசாத்தி

ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ, பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
சேலைக்கு சாயம் போகும் மட்டும் ஒன்ன நான் வெளுக்க வேணுமடி
பாடுபட்டு விடியும்பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி

புது பொண்ணே
அதுதான்டி தமிழ்நாட்டு பாணி

சரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்
சரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்

வெக்கத்தையே கொழச்சி-கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள வேர்வைய போல் வாசம் ஏதடி?
ஏ பூங்கொடி வந்து தேன் குடி
அவன் கைகளில் உடையட்டும் கன்னி கண்ணாடி

கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்

அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்
இவ கொரங்கு கழுத்தில் குட்டிய போல தோளில் ஒட்டிக்கிட்டா
இனி புத்தி கலங்குற முத்தம்கொடுத்திரு ராசாவே

பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹ, மாப்பிள்ள வெத்தலப்பொட்டி
எடுத்து ரத்தனகட்டிய வெத்தல பொட்டியில் மூடச்சொல்லுங்கடி
மொதலில் மால மாத்துங்கடி, பிறகு பால மாத்துங்கடி
கட்டில்விட்டு காலையிலே கசங்கி வந்தா சேல மாத்துங்கடி

மகராணி
அதுதான்டி தமிழ்நாட்டு பாணி

கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்

(புது பொண்ணே)
(அதுதான்டி தமிழ்நாட்டு பாணி)
(புது பொண்ணே)
(அதுதான்டி தமிழ்நாட்டு பாணி)