Karma Song
B. Ajaneesh Loknath, Trilok Trivikrama, & Venkatesh D. C.
4:01வினைகளின் விதியினில் விழுந்திட்ட மனிதனின் மனம் பெரும் காயமோ வேகுது கர்வத்தில் தர்மத்தை தொலைத்திட்ட கள்வனின் கைகண்ட கரைகள் கூடுது இருளிலே செவி ஏறும் இடி போல வரையும் அது போகும் பூமி தாயின் மடியை தேடித்தானோ ஓ கருவிலே விதி எனும் வடு தோன்றுமே வலி தீர தேடி வாழ்வு தினம் தேயுமே எதிரிகள் எவரென யார் அறிய தனக்குள்ள தேடி காலம் அது போகுதே பொன்னி எனும் நதி அது பிணி நீக்கி போகும் கண்ணில் இன்னும் ஏனோ அடக் கண்ணீர் முட்டி திஙும் ஆணவத்தை மலராக்கி நீ சூடும் மாலை விடிந்தாலே வாடி உதிரி நாராய் மாறும் ஓ மரணத்தை காட்டிலும் வாழ்க்கை பாரமே அதுக்கான முடிவோ சிதையில் தான் உள்ளதே பிறப்பிலே இறப்பின் வாசல் உள்ளதே திறவைத்தான் எண்ணி மனமும் ஏனோ மயங்குதே தாய் மடி இங்கே அட ரத்தமாக மாறும் பங்கு போட தானே பாவம் இன்னும் கூடிப் போகும் சுழலும் பூமி மேல் நீ போடும் ஆட்டம் இறுதியிலே நாடி உருகி தீ தின்று போகும்