Manidhanin Payanathil

Manidhanin Payanathil

B. Ajaneesh Loknath, Venky Dc, & Palani Bharathi

Длительность: 2:56
Год: 2022
Скачать MP3

Текст песни

மனிதனின் பயணத்தில்
விதி வழி துயரத்தில்
தோன்றிடும் காயங்கள் ஆறுமோ?
அன்பையும் பன்பையும்
அறிந்திடும் ஒரு மனம்
வெறுப்பிலும் சினத்திலும் வாருமோ?

வெளிச்சத்தை தரும் என்று ஏற்றிய தீபம்
ஊர் முழுவதையும் எரித்துவிட்டு தீயாய் ஆனதேனோ?

ஏ-ஆ-ஏ-ஏ-ஏ-ஆ-ஒ
ரே-ரே-ரே-ரா-ரோ
ஆரே-ராரோ-ரேராரிரோ-ரே-ரேராரோ

ஓர் கருவறையில் காயம்பட்ட விதி வலிகள்
அதன் விடைத்தேடி தினமும் அலைந்து ஓடுவாய்
கண்கள் காணா எதிரியை
தேடி அலைந்தால்
நீ உன்னை நீயே தொலைத்து மனம் வாடுவாய்
பாவங்கள் எல்லாம், அந்த கங்கை கொண்டு போகும்
குற்ற உண்ர்வாலே மனம்
இன்னும் கொஞ்சம் வேகும்

இன்று உன்னை அனைகின்ற புத்தம் புது மாலை
ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நடப்பதை யார் அறிவார்?

ஏ-ஆ-ஏ-ஏ-ஏ-ஆ-ஒ
ரே-ரே-ரே-ரா-ரோ
ஆரே-ராரோ-ரேராரிரோ-ரே-ரேராரோ

ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ