Koodamela Koodavechi

Koodamela Koodavechi

D. Imman, V.V. Prassanna, Vandana Srinivasan, And Yugabharathi

Длительность: 5:01
Год: 2013
Скачать MP3

Текст песни

அஅ...அஅ...அ
கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன

ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா

கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள நீ
கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது
நேரமா பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா

சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற

சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற

அதிகம் பேசாம
அளந்து தான் பேசி
எதுக்கு சடைபின்னுற

சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற

கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன

ஏஏ...ஏஏ..ஏஏ
எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே

மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத நினைப்புதான்
சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட
தான் தங்கமே உன்ன பாக்க
பாக்க தான் இன்பமே

நீ பாக்காம போனாலே
கிடையாதே மறுஜென்மமே

ஹ....கூடமேல கூடவச்சி
கூடலூரு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன

ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா

நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன்
தாரமா நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா