Vaararu Vaararu (From "Kallalagar")

Vaararu Vaararu (From "Kallalagar")

Deva

Альбом: Best Of Deva'S Hits
Длительность: 3:56
Год: 2022
Скачать MP3

Текст песни

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு

சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
உலகம் காக்க வாராரு
உள்ள கழகம் தீர்க்க போறாரு

வெட்டவெளி பொட்டலிலே
சாதி சனம் கூட்டியே
கட்டழகையும் கண்ணழகையும்
பட்டழகையும் காட்டியே
வாராரு வாராரு அழகர் வாராரு

ஆகாயம் பூமி எல்லாம்
ஆட்டி வச்சவர் அழகரு
ஆட்டி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத
கூட்டி வச்சவர் அழகரு
கூட்டி வச்சவர் அழகரு

சமயங்களில் வேற்றுமையை
பூட்டி வச்சவர் அழகரு
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்தா சக்கரத்தை
தீட்டி வச்சவர் அழகரு
தீட்டி வச்சவர் அழகரு

முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலயே
வந்தது வந்தது கோடி சனம்
நம்ம வைகை நதிக்கரை பத்தலையே

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு

சாமி கண்டதும் பாதி சனங்க
சாமியேறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க
சாதி மறந்து கூடுதே

உச்சி அழகு பார்த்த பிறகு
உச்சந்தலையில் ஏறுதே
சண்டை மறந்து சத்தம் மறந்து
சச்சரவுகள் தீருதே

வெள்ளி மலையில சாமியாடி
இது ஏழைங்க பக்கமே நிக்குமடி
நன்மையடி தினம் நன்மையடி
இனி நாடு முழுக்க நன்மையடி

வரும் தொட்ட துளங்கும் காலமடி
நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
கொட்ட கொட்டுனு கொட்டுமடி
செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி

வந்தோம் திரண்டு வந்தோம்
மதுரை வந்தோம் அழகர் வாழியவே

கண்டோம் அழகர் கண்டோம்
மகிழ்வு கொண்டோம் மதுரை வாழியவே

கொண்டோம் உணர்ச்சி கொண்டோம்
எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே

தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம்
பாடி ஆடுகவே
தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம்
பாடி ஆடுகவே