Paatukku Palaivanam

Paatukku Palaivanam

Deva, Vairamuthu, Hariharan, And Krishnaraj

Длительность: 5:41
Год: 2023
Скачать MP3

Текст песни

ஆஅ ஆஅ...
தானே நானே நான நானா
தானே நானே நான நானே
தந்தனா நானே னா

மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்ல மொட்டு மெட்டுக்கள் திறக்குதடி
விட்டு விட்டு அல வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் தட்டை ஆடுதடி
அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில
பச்ச பசுங்கிளி ஒன்னு சூட்சமத்தில் தாவுதடி

மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்

சசசசசச சசசசசநீபநீ
சசசசசச சசசசசநீபநீ
கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா
சசநீதபா நிநிதபம பமகப மகரிச

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்

பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு?
மழை வந்து பாடும் பாட்டு
காற்றுக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு?
துளை மூங்கில் பாடும் பாட்டு

துவைக்கின்ற மனிதன் கலைப்புக்கு மருந்து
சோ வென்னும் இசை பாட்டு
விதைக்கின்ற மனிதன் அலுப்புக்கும் மருந்து
அவன் சொல்லும் நேர் பாட்டு

காரா பசு கழுத்துமணி
கன்றுக்கு புது பாட்டு
பள்ளிகூடத்தின் கடைசிமணி
பையனுக்கு இசை பாட்டு
அட சுத்தி வரும் பூமியில்
சுத்தி சுத்தி பாட்டு

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்

பிறந்ததும் பிள்ளை கேட்க்கும் முதல் பாட்டு
பெற்ற தாயார் பாடும் தாலாட்டு
வளர்ந்ததும் நெஞ்சில் பாயும் ஒரு பாட்டு
அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு

இருமனம் இணைந்து
ஒரு திருமணம் புரிகையில்
ஊஞ்சலில் மணப் பாட்டு
ஐ இரண்டு மாதத்துக்கு
கை ரெண்டில் வளைபோடும்
நலுங்குக்கு ஒரு பாட்டு

பிள்ளை வளர பேரன் வளர
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு
கடைசியிலும் ஒலித்திடுமே
கால்கள் இழந்த கட்டில் பாட்டு
அட தொடக்கமும் பாட்டில் முடிப்பதும் பாட்டு

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்

மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்ல மொட்டு மெட்டுக்கள் திறக்குதடி
விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் தட்டை ஆடுதடி
அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில
பச்ச பசுங்கிளி ஒன்னு சூட்ச்சமத்தில் தாவுதடி

மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் காயம் ஆறுமடி

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்