Mutthukku Mutthaga

Mutthukku Mutthaga

Ghantashala

Длительность: 3:32
Год: 1973
Скачать MP3

Текст песни

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாயாரும் படித்ததில்லை
தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி
ஓர் பாட்டும் அறிந்ததில்லை

தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி
தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினிலே
நான் வாழ்கிறேன் அவனை நம்பி

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம்
தெய்வமென காவல் கொள்ளும்
அன்னையென வந்த உள்ளம்
தெய்வமென காவல் கொள்ளும்
சின்ன தம்பி கடைசி தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை

சின்ன தம்பி கடைசி தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்று பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா
ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா

ரோஜாவின் இதழ்களை போல்
தீராத வாசமடா
ரோஜாவின் இதழ்களை போல்
தீராத வாசமடா
நூறாண்டு வாழ வைக்கும்
மாறாத பாசமடா

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக