Lahilaha Illalla
Haji Nagore E. M. Hanifa
4:43வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி வாழ்க வாழ்கவே வாழ்கவே ஆதி பிதா நபி ஆதம் ஹவ்வாவும் அகிலத்தில் மகிழ்வாய் வாழ்ந்தது போலும் நீதீ இப்ராஹீம் நபியுடன் சாரா நேர்மை ஹாஜிரா வாழ்ந்தது போலும் வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி வாழ்க வாழ்கவே வாழ்கவே இறைவனை கண்ட மூஸா நபியுடன் ஏந்திலாய் சபூரா வாழ்ந்தது போலும் பொறுமை மிகுந்த அய்யூப் நபியுடன் ஹுவை ரஹீமா வாழ்ந்தது போலும் வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே கலைமிகும் அழகு யூசுப் நபியுடன் கனிவுடன் சுலைஹா வாழ்ந்தது போலும் உலகத்தை ஆண்ட சுலைமான் நபியுடன் உன்னத பல்கீஸ் வாழ்ந்தது போலும் வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி வாழ்க வாழ்கவே வாழ்கவே இறைவன் தூதராய் சுடராய் வந்த ஏந்தல் முஹம்மத் நபியுடன் வாழ்ந்த நேரிமிகும் காதீஜா ஆயிஷா போலும் நெஞ்சம் நினைந்து மகிழ்வுடன் நாளும் வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே வீரம் நிறைந்த வேந்தர் அலியுடன் வாஞ்சய் பாத்திமா வாழ்ந்தது போலும் நேரிய குர்ஆன் நேரிமுறை தாங்கி நிதமும் வாழ்ந்த வலிமார் போலும் வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயுளும் நிரந்த செல்வமும் நிதமும் பெற்றுத் நீடூழி வாழ்க ஆண்டவன் அருளால் குழந்தைகள் ஈன்று அரமாய் நபி வழி நன்கு நடந்த வாழ்க வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே உற்றார் பெற்றோர் யாவரும் மகிழ உவகை பொங்கிடும் நண்பர்கள் புகழ வற்றாத துஆ செய்திடும் பெரியோர் வாகாய் உள்ளம் மலர்ந்து திகழ வல்லவன் அருளால் நல்லறம் பேணி வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு வாழ்க வாழ்கவே வாழ்கவே(வாழ்கவே)