Ennai Saaithaalae

Ennai Saaithaalae

Harris Jayaraj

Длительность: 5:30
Год: 2013
Скачать MP3

Текст песни

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம்
அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும்

கால் பக்கம் வந்து பின்னும்

கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்

பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

மாலை வந்தால் போதும்
ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும்

உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்

என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்