Kannai Vittu

Kannai Vittu

Harris Jayaraj

Длительность: 6:05
Год: 2016
Скачать MP3

Текст песни

கண்ணை விட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
வானம் விட்டு என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே

மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
இன்னும் இன்னும் என்னை
என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் நுழைப்பேனா

செதிலாய் செதிலாய் இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென உனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே

உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே

பிணமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இங்கே
நம்முன் பூத்த காதல் எங்கே
கண்ணை விட்டு கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு என்னைத் தொட்டு
நீயே வந்தாய்

மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே