Unakkul Naane

Unakkul Naane

Harris Jeyaraj

Длительность: 4:42
Год: 2007
Скачать MP3

Текст песни

மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாலே

வெண்ணிலா துவி
தன் காதல் சொன்னாலே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாலே

பொன் மான் இவளா
உன் வானவில்லா
உன் வான் இவளா
உன் வானவில்லா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா

சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தையேதான்
ஏன் அதில் உன் என் மௌனமேதான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்

ஒரு முறை உன்னை
எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ஓஓ

தீபோல் தேன்போல் சலனமேதான்
மதியினும் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே(ஓலலல ஓலா ஓலா ஓலா )
நினைவை வெட்டி சென்றாயே(ஓலலல ஓலா ஓலா ஓலா )

இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா

சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா