Enna Saththam Indha Neram

Enna Saththam Indha Neram

Ilaiyaraaja

Длительность: 4:19
Год: 2024
Скачать MP3

Текст песни

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?

கிளிகள், முத்தம் தருதா?
அதனால், சத்தம் வருதா?
அடடா ஆ

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர்
அது யாராலே?

கன்னியின் கழுத்தைப் பார்த்தால்
மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள்
ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ?
பதில் சொல்வார் யாரோ?

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?

கிளிகள், முத்தம் தருதா?
அதனால், சத்தம் வருதா?
அடடா ஆ

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ?
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ?

உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ?
உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசையாகாதோ?

மங்கையிவள் வாய் திறந்தால்
மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை
உச்சரித்தே பேசும்
யாரிவர்கள், இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?

கிளிகள், முத்தம் தருதா?
அதனால், சத்தம் வருதா?
அடடா ஆ

என்ன சத்தம் இந்த நேரம்?
குயிலின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம்?
நதியின் ஒலியா?