Raja Raja Chozhan
Ilaiyaraaja
4:35அடி கதை கேளு கதை கேளு கருவாயன் கதை கேளு அடி கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி கரிமேட்டுக் கருவாயன் கதை போல இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி கட்டுக் கதை இல்லை ஒட்டுக் கதை இல்லை கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு வைகை நதிக்கரை ஓரத்துல அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி உண்மையில அவன் கள்ளனில்லை யாய உண்மையில அவன் கள்ளனில்லை மருத ஜில்லாவுக்கே அவன் செல்ல புள்ள சொந்தம் ஒரு ஆள் இல்லை பந்தம் அதுதான் இல்லை மலையும் மரமும் தவிர யாரும் இல்லை தங்கச்சிய பண்னை கற்பழிச்சான் அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான் இன்னும் பழி வாங்காது கண்ணில் இமை காயாது எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான் சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி சனங்கெல்லாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் போலீஸ் கதை கேளு கதை கேளு கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி தென்னை மரத்துல படுத்திருப்பான் ஆனா பூமியில கண்ண வச்சிருப்பான் கவட்ட வில்லும் உண்டு கையில் ஒரு வில்லுண்டு வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான் கன்னி கழியாத காளியம்மா இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம கடைசி வரையில் இருந்தா சாவியம்மா சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள் இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள் இன்னும் சொல்லப் போனா இளமை வீணா போனா கருவாயன் கட்டைக்கு வெறகா போனா கதை கேளு கதை கேளு கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும் அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும் ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும் கருவில் இருக்கும் பிள்ளை கையெடுக்கும் பாவிப் பயல்கள வேரழிச்சான் அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான் மானம் பிரதானம்தான் நானும் கரிகாலன்தான் இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான் தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி தென்பாண்டி மன்னன்தான் வந்தான் உரு மாறி அவனை எண்ணிக் கொண்டு நெஞ்சில் சோகம் கொண்டு வாய்க்காலா போகுது வைகை நதி கதை கேளு கதை கேளு கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி கட்டுக் கதை இல்லை ஒட்டுக் கதை இல்லை கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு அந்த வைகை நதிக் கர ஓரத்துல அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு கதை கேளு கதை கேளு கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி ஏ