Kaadu Malai Kadanthu

Kaadu Malai Kadanthu

K. Veeramani

Длительность: 4:09
Год: 2000
Скачать MP3

Текст песни

ஐயப்பா சாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா
மாய‌ வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா
சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா

நெய்யபிஷேகம் பாலபிஷேகம்
தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம்
எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே

காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா

ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா
எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா
ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா
எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா
நாங்கள் பேட்டைத் துள்ளி ஆடும் போது ஐயப்பா

பேட்டைத் துள்ளி ஆடும் போது ஐயப்பா
நீ ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா

காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா

நீலவிழி கண்ணனுக்கும்
நீரணிந்த‌ ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா

நீலவிழி கண்ணனுக்கும்
நீரணிந்த‌ ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா

வேலவனின் அருமைத் தம்பி
காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா

காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா

மணிகண்டா உன் கருணை அமுதமப்பா
உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா
மணிகண்டா உன் கருணை அமுதமப்பா
உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா

மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா
அப்பா மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா

நெய்யபிஷேகம் பாலபிஷேகம்
தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம்
எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே

காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா

ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா