Aadi Vanthaen

Aadi Vanthaen

L. R. Eswari

Альбом: Thaaye Karumaari
Длительность: 4:15
Год: 2019
Скачать MP3

Текст песни

ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
பாடி வந்தேன் பாடி வந்தேன்
பாண்டியனார் தேவி
தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி

ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேலை ஆகாதம்மா
நானே ஒரு மாயை

தொட்டியத்தில் அழகு தில்லையில்
திருச்சி நகர் உறையூரில்
காளி என்று கோவில் கொண்டு
கொழுவிருக்கும் அம்மனும் நானே

பண்ணாரியில் சமயபுரத்தில்
புஞ்சை வளர் தஞ்சையினில்
மாரி என்று பெயர் படைத்து
மக்களை காக்கும் அன்னையும் நானே

அகிலமும் சுழலாதா
அடியே என் பிடியினிலே
அதியசயம் நிகழாதா
நெனச்சா ஒரு நொடியினிலே

கைகளில் சக்கரம் சங்கை
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை
மார்சடை மீதினில் கங்கை
கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை
ஆடி வந்தேன்

ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்
பம்பரமா ஆடிக்கிட்டு
பாவத்துக்கு நீங்கி வந்த
பைரவி நான் பாரடியம்மா

வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற
வஞ்சியற்க்கு வாழ்வு தந்து
வாழ வைக்க என்னைவிட்டா
வையத்திலே யாரடியம்மா

கருங்கல்லு சிலைதான்னு
எளிதா நீயும் நினைக்காதே
கொடுப்பத கொடுக்காம
மறைச்சா இங்கு நடக்காதே

பூவையே பூவையே கேளு
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி
பூமியில் ஏதடி கூறு
இந்த சக்தியை மிஞ்சிற சக்தி
ஆடி வந்தேன்

ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி

ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேலை ஆகாதம்மா
நானே ஒரு மாயை