Pichai Pathiram

Pichai Pathiram

Madhu Balakrishana

Альбом: Naan Kadavul
Длительность: 5:07
Год: 2009
Скачать MP3

Текст песни

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற
வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம்
இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே