Idhayam Love (Megamo Aval) (From "Meyaadha Maan")

Idhayam Love (Megamo Aval) (From "Meyaadha Maan")

Pradeep Kumar

Длительность: 4:52
Год: 2018
Скачать MP3

Текст песни

மேகமோ அவள்?
மாய பூ திரள்
தேன் அலைச் சுழல்
தேவதை நிழல்

அள்ளிச் சிந்தும் அழகின் துளிகள் உயிரில்பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாதச்சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்

மேகமோ அவள்
மாய பூ திரள்

வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்

என் நிழலும் எனையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்

மேகமோ அவள்?
மாய பூ திரள்
தேன் அலைச் சுழல்
தேவதை நிழல்

உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்

இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்

மேகமோ அவள்?
மாய பூ திரள்
தேன் அலைச் சுழல்
தேவதை நிழல்

அள்ளிச் சிந்தும் அழகின் துளிகள் உயிரில்பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாதச்சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்

(மேகமோ அவள்?) இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் (மாய பூ திரள்)
(தேன் அலைச் சுழல்) அவள் பாதச்சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் (தேவதை நிழல்)

மேகமோ அவள்?
மாய பூ திரள்