Kadhal Ara Onnu Vizundhuchu

Kadhal Ara Onnu Vizundhuchu

Sean Roldan

Длительность: 3:46
Год: 2014
Скачать MP3

Текст песни

தட்டுக் கெட்டு மனசுத்தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல
பூப் போலத் தெறிச்சா
உள்ளுக்குள்ள நுழைஞ்சு
சேர்ந்தே தான் துடிச்சா
கட்டுக் கட்டா ஆச
நூறாக வெதச்சா
கத்தி மொன கண்ண வச்சு
கண்டபடிக் கிழிச்சா

கண்ணு ரெண்ட உருட்டி
கட்டிப் புட்டா ஒருத்தி
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டிப் புட்டா ஒருத்தி

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு

தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல
பூப் போலத் தெரிச்சான்
உள்ளுக்குள்ள நொழஞ்சு
சேர்ந்தே தான் துடிச்சான்
கட்டுக் கட்டா ஆச
நூறாக வெதச்சான்
கத்தி மொன கண்ண வச்சு
கண்டபடிக் கிழிச்சான்

ம்ம்ம்ஹூம் ஆஹா ம்ம்ம்
தாவிடும் ஓடையை தேக்கிட
காதலின் வாய் மொழி தேங்கிட
வேதனை வாசமோ…..ஓ…..ஓ……ஓ

கூட்டிடும் வாசலின் தாகமாய்
காட்டிடும் நேசமாய் பேசிடும்
ஓசையோ கானலாய் மாற

ஏங்கிடும் மனதை சோலைகள்
சுமந்து போகும் வேகமாய்
எமது காதலின் வரிகள் கூடும்

சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்
சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு

தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல
பூப் போலத் தெரிச்சான்
உள்ளுக்குள்ள நொழஞ்சு
சேர்ந்தே தான் துடிச்சான்
கட்டுக் கட்டா ஆச
நூறாக வெதச்சான்
கத்தி மொன கண்ண வச்சு
கண்டபடிக் கிழிச்சான்

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு