Kannukkulle Kadhala

Kannukkulle Kadhala

Swarnalatha

Длительность: 4:43
Год: 2002
Скачать MP3

Текст песни

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைக்கிறாய்

நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான்
கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வருமுன் தடுக்கும் தடுப்புஊசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்தை தேட
அதன் பதினெட்டு உயிரும் பன்னிரு மெய்யும் போதாதல்லவா

நீ ஆசை மொழின் நகரம் தான்
நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்
நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான்
உன் அசைவால் நானே அசைவம் தான்
தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே
உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல
அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே

என் இமையை மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும் திருடாதே
நீ விழியால் மனதை உழுதாயே
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைக்கிறாய்
நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான்
கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா