Mannaanalum
T.M. Soundararajan
4:09மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன் அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் முருகா முருகா முருகா முருகா