Ulagangal Yaavum

Ulagangal Yaavum

T M Sounderrajan

Альбом: Thiruvarul
Длительность: 4:15
Год: 1975
Скачать MP3

Текст песни

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்
மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்
பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே

முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே