Colourful Nilavu
Vasundra Das & Timmy
5:02சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும் இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே நேற்றும் இன்றும் வேறா? இன்று காணும் நானும் நானா? உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே ஒன்னே ஒன்னு சொல்லணும்... ஒன்னே ஒன்னு சொல்லணும் உன் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா? நாணம் மாறி போனதே என் நளினம் கூடி போனதே அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே நேற்றும் இன்றும் வேறா? இன்று காணும் நானும் நானா? உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை நீ கிள்ளும் பூக்களை... நான் சூடி கொள்ளவே என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே ஆனாலும் நேரிலே... எப்போதும் போலவே இயல்பாக பேசி போவது என்றாச்சே என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே நேற்றும் இன்றும் வேறா? இன்று காணும் நானும் நானா? ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும் இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி பருகுதே என்னை இங்கே வர செய்தாய் என்னனவோ பேச செய்தாய் புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன அருகினில் அமர்ந்து என்னை உற்று உற்று பார்க்கும் உந்தன் துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன? என் பார்வை புதுசு தான் என் பேச்சும் புதுசு தான் உன்னாலே நானும் மாறிபோனேனே கூட்டத்தில் என்னை தான் உன் கண்கள் தேடனும் என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே நேற்றும் இன்றும் வேறா? இன்று காணும் நானும் நானா? உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே ஒன்னே ஒன்னு சொல்லணும் உன் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா? நாணம் மாறி போனதே என் நளினம் கூடி போனதே அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா நீயே சொல்வாயா நீயே சொல்வா... யா... நீயே சொல்வாயா