Kurumugil (From "Sita Ramam (Tamil)")

Kurumugil (From "Sita Ramam (Tamil)")

Vishal Chandrashekhar

Длительность: 3:39
Год: 2022
Скачать MP3

Текст песни

குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்

எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்

கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ

எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்

உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்

கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்