Merke Merke (From "Kanda Naal Mudhal")

Merke Merke (From "Kanda Naal Mudhal")

Yuvan Shankar Raja, Thamarai, Shankar Mahadevan, And Sadhana

Длительность: 5:08
Год: 2005
Скачать MP3

Текст песни

லைலை லைலை லைலைலே
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கேதான்
சூரியன்கள் உதித்திடுமே

சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா

இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே

ஓ… மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத்தானோ

லைலை லைலை லைலைலே
லாஹி லாஹி லைலைலே
மேற்கே மேற்கே மேற்கேதான்
சூரியன்கள் உதித்திடுமே

ஓஓ...ஓஓ...ஓஓ
கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா… ஓ
கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே

மேற்கே மேற்கே மேற்கேதான்
சூரியன்கள் உதித்திடுமே
லைலை லைலை லைலைலே
லாஹி லாஹி லைலைலே

வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேன் அடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ

மேற்கே மேற்கே மேற்கேதான்
சூரியன்கள் உதித்திடுமே
லைலை லைலை லைலைலே
சூரியன்கள் உதித்திடுமே
மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ