Aalaporaan Thamizhan (From "Mersal")

Aalaporaan Thamizhan (From "Mersal")

A.R. Rahman

Длительность: 5:49
Год: 2017
Скачать MP3

Текст песни

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய்
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு

முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம் (வெற்றி)
ஊருக்க்குன்னே வாழு கண்ணு (மழை)
அப்பனுக்கும் சம்மதம்(வீதி பொழியனும்)

எந்த எடம் வலி கண்டாலும்
கண்ணுதானே கலங்கும் (ஆஆஆ)
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

ஹே...ஹே...ஹே...ஹே

ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே

வீரன்னா யாருன்னு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே

ஹேய் ஹேய்
சொல்லிச் சொல்லி
சரித்திரத்தில் போ் பொறிப்பான்

நெஞ்சில் அள்ளி
காத்தில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்

இன்னும்
உலகம் எழ
தங்க
தமிழப்பாட

ச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்

வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா

சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காத்தோட கலந்தாலும்
அதுதான் உன் அடையாளம்

ஒஒஒ...ஓஓஓ...ஓஓஓ

ஹே அன்பைக் கொட்டி
எங்கமொழி அடித்தளம்
போட்டோம்
மகுடத்த தரிக்கிற ழகரத்தை
சோ்த்தோம்

தலைமுறை கடந்துமே விரிவத
பாத்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரென
காத்தோம்

நாள்நகர மாற்றங்கள் ஏதும் (ஓஓஓ)
உன் மொழி சாயும் என்பானே (ஓஓஓ)
பாரிழைய தமிழன்னு வருவான் (ஓஓஓ)
தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே (ஓஓஓ)

கடைசித் தமிழனின்
ரத்தம் எழும்
வீழாதே (முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்)
தமிழினமே (ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்)
வீழாதே (எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்)
தமிழினமே (கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்)

நெடுந்தூரம் ஓன் இசை கேட்கும்
பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான் உயிர் அழியும்
உன் நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்

முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம் (வாழவா)
ஊருக்குள்ள வாழத்தண்டு (ஆஆஆ)
அம்மனுக்கும் சம்மதம் (ஆஆஆ)

எந்த எடம் வலி கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே

வீரன்னா யாருன்னு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே ஹே

வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா

சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்