Powerhouse (From "Coolie") (Tamil)
Arivu
3:27அத்துவான காட்டுக்குள்ள ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவயில்ல ஓடுடா உச்சிப்பாற மேட்டு மேல கட்டிவெச்ச கோட்டக்குள்ள முட்டி, மோதி முன்னேறு நீ மாடன்டா கனவ மறச்சிட படையில்லடா கண்ணுக்கு தெரிவது தடையில்லடா திமிரும் திமிலுக்கு பகையில்லடா பயந்த உடலுக்கு உயிரில்லடா கெளம்புடா இனி கலங்காத பாயுடா இனி பதுங்காத தேடுடா நீ தயங்காத விளையாடுடா நீ அடங்காத போ அடச்சுவச்ச கூடு இப்ப தெறக்குது தோல் கிழிஞ்சும் என்ன பட்டாம்பூச்சி பறக்குது வான் உயரம் என்ன யாரு இப்ப அளப்பது நீ பொறந்து வந்த ஏக்கம் இங்க, ஏக்கம் இங்க, ஏக்கம் இங்க பறப்பது அத்துவான காட்டுக்குள்ள ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவயில்ல ஓடுடா ரெக்க, ரெக்க ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க ஏ மண்ணவிட்டு, மரத்தவிட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க ஏ வயலவிட்டு, வரப்பவிட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க ஏ பகையவிட்டு, பழியவிட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க-ரெக்க ஏ இருளவிட்டு ஒளியதொட்டு வானத்துக்கு நீ பறக்க ஏய் உன்னத்தான் வாடா உனக்கு காளமாடன் கத சொல்றேன் வாடா ஏய் உன்னத்தான் வாடா ஊரு கொம்புமாடன் கத சொல்றேன் வாடா, ஏ வாடா ஏ உன்னத்தான் புழுதி கெளப்பிட்டு உன் மண்ணத்தான் எடுத்து பூசிகிட்டு வா முன்னத்தான் திமில சிலுப்பிட்டு வா முன்னத்தான் காட்டு யானைக்கு ஒரு பாத உன் கால்கள் தேடட்டும் புது பாத பூமி சுத்துது உனக்காக புகுந்து புறப்படு புயலாக போ மறிச்சு நிக்கும் மலையெல்லாம் துளச்சிட்டு நீ ஒளிச்சுவெச்ச வெளிச்சத்த எடுத்துட்டு வா திறக்கும் அந்த வாசல் வழி தொடங்கட்டும் போர் நடக்க இங்க வேலியெல்லாம் தீப்பிடிக்க-தீப்பிடிக்க எரியட்டும் அத்துவான காட்டுக்குள்ள ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவயில்ல ஓடுடா கனவ மறச்சிட படையில்லடா கண்ணுக்கு தெரிவது தடையில்லடா திமிரும் திமிலுக்கு பகையில்லடா பயந்த உடலுக்கு உயிரில்லடா கெளம்புடா இனி கலங்காத பாயுடா இனி பதுங்காத தேடுடா இனி தயங்காத விளையாடுடா நீ அடங்காத போ அடச்சுவச்ச கூடு இப்ப தெறக்குது தோல் கிழிஞ்சும் என்ன பட்டாம்பூச்சி பறக்குது வான் உயரம் என்ன யாரு இப்ப அளப்பது நீ பொறந்து வந்த ஏக்கம் இங்க, ஏக்கம் இங்க, ஏக்கம் இங்க பறப்பது