Tajumahal Thevailla

Tajumahal Thevailla

Bala Bharathi

Длительность: 4:05
Год: 2022
Скачать MP3

Текст песни

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே

காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்

ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே
கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடி
என்ன கேள்வி கேட்குமா

வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்ப பாவமென்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வானும் மண்ணும் பாடல் சொல்லும்
நம் பேரிலே

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே

காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே