Soi Soi

Soi Soi

D. Imman, Magizhini Manimaaran, & Yugabharathi

Длительность: 3:43
Год: 2012
Скачать MP3

Текст песни

ஹோ....ஆலே...ஏஏஏஏ

சொய் சொய்
சொய் சொய்

கையளவு நெஞ்சத்தில
கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அதுதான் காதல் மச்சான்

நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சொய் சொய்
சொய் சொய்

வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்

நாம வேண்டி கொண்டாலும்
வேண்டாவிட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சொய் சொய்
சொய் சொய்

தானே..தந்தானே...தானே..தந்தானே...தானேனா

ஏடளவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அதுதான் ஊரு மச்சான்

நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல
அதுதான் நேசம் மச்சான்

நாம மாண்டு போனாலும்
தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

சொய் சொய்
சொய் சொய்

கையளவு நெஞ்சத்தில
கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அதுதான் காதல் மச்சான்

நாம காணும் எல்லாமே
கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்