Naane Indhiran

Naane Indhiran

Devi Sri Prasad

Длительность: 5:32
Год: 2010
Скачать MP3

Текст песни

ஹே நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை கூச்சலிலே
தட்டுக்கிற ஓசையிலே

சுத்திவரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்

ஹேய் ஹேய் ஹேய் அட்ரா  அட்ரா அட்ரா அட்ரா

ஹேய் நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன்

பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்

ஹேய் காக்கி சட்டை நாட்டாம நானு
கைது பண்ணும் வேலை இல்லை
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா
கேசு போட தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம்
எப்போதுமே வீராப்பா திரிவதில்லை

ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா வா வா வா
ஹே அள்ளி விடவா ஆஅ ஆஅ

அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு

சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில முங்கி குளிச்சா
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும்டா
என்ன போல பேரோட இருக்கணும்டா

ஹேய் கத்துதரவா ஒத்துகிடவா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா ஆஅஆ

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன் ஹே

ஹே சீறிவரும் காளை கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்

தன்னானே தான்னானே தந்தானே
தன்னானே தான்னானே தந்தானே

நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்டை போட்டா சிங்கம்

தன்னானே தான்னானே தந்தானே
தன்னானே தான்னானே தந்தானே

கருக்கு வேல் அய்யனாரு
கலையாத்தான் நிக்குறாறு
கலைவாணி யாரும் வந்தா
கலவாங்க விடமாட்டாறு

எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேல இருப்போம்

குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா ஹான் அஆன்

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள
சூரியனை போல் சுத்தி வருவேன்( ஓஓஓஓஓஓ )

பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன் ஹே ( ஓஓஓஓஓஓ )