Mannile

Mannile

Devi Sri Prasad, Sumangali, Spb Charan, And Vairamuthu

Длительность: 5:25
Год: 2005
Скачать MP3

Текст песни

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே

I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்

பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ
ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ
வான் தரைகள் எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அர்ச்சதையோ

இத்தனை மழையிலும் இந்த ஞானம் கரையவில்லை
கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
தனி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை

I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
I love you ஷைலஜா ஷைலஜா ஷைலு ஷைலு

நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே

மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா

I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரி பாஷை
மழையை போல உறவாடு மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே

I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு