Kanaa Kaangiren
G.V. Prakash Kumar, Shubha Mudgal, Nityashree Mahadevan, Vinitra, And Vairamuthu
5:46நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கே வில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே கயல் விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து கழிந்தன் கண்கள் காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள் ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும் புலிக்கொடி பொற்த்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொறிப்பதுவோ காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பது... ஓ... மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ... ஓ...