Idhu Enna Mayam

Idhu Enna Mayam

G. V. Prakash, Na. Muthukumar, Shankar Mahadevan, And Alka Yagnik

Длительность: 4:38
Год: 2007
Скачать MP3

Текст песни

இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன்
மேலே மேலே மேலே

இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

இரு சிறகை விரித்து
நான் மிதந்து போகிறேன் மேலே ஓஹோ

கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புது புது
அனுபவம் எதிரிலே

உலகமே
உன்னால் இன்று புதியதாய்
உணர்கிறேன்
உற்சாகத்தை முழுவதாய்

என் வானத்தில் சில மாற்றங்கள்
வென் மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

ஓஓ  இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே ஓஓஓ

நா நா நா நா ஆஆஆ

நான் நேற்று வரையில்
பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்

விழிகளை நீ மூடி வைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடி வைத்தால்
பயணங்கள் கிடையாதே

விரலோடு தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி இல்லை
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும்
காற்றில் போகிறேன்

இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

ஓஓ இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும்

இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே
மேலே மேலே மேலே மேலே