Kaadhal Vaithu

Kaadhal Vaithu

Yuvan Shankar Raja

Длительность: 5:09
Год: 2007
Скачать MP3

Текст песни

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்தபின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்டபோதெல்லாம் நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னயே பார்த்தபின்பு நான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்திமாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்டநாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய், கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய், வெயில்கூட ரசிக்க வைத்தாய்