Thaarame Thaarame

Thaarame Thaarame

Ghibran

Альбом: Kadaram Kondan
Длительность: 3:49
Год: 2019
Скачать MP3

Текст песни

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திடச் சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாயக்கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆழம் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே
இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒருத்துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம்
தீமீதிலும் ஈரம்

நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது
பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக் கூடாது
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி
எதுவும் தெரிய கூடாது

தாரமே தாரமே வா (ஆஆஆ)
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா