Mudhal Nee Mudivum Nee Title Track (From "Mudhal Nee Mudivum Nee")
Darbuka Siva
5:33வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே நீயே கண்டேன்-கண்டேன் என்னுடையவளை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை கண்டேன்-கண்டேன் என்னுடையவனை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை உற்று உன்னை பார்க்கையிலே தோற்று கிடைத்த தனிமையினை கற்று தந்த காதல் வலி விட்டுபோனதே ஊர்கூடும் நல்ல-நல்ல தடங்களெல்லாம் உன்னை கூட்டிக்கொண்டு கைகோர்த்துகொண்டு இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்களெல்லாம் வா தேடி-தேடி போவோம் இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே விழிமூடி நீயிருக்கும் வேலையிலே என்னென்ன வரம் வேண்டும் என்பதையே நான் வேண்டி-வேண்டி கேட்ப்பேன் வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடி திரிவோம் வா என் துணையே, வழிதுணையே நீயே கண்டேன்-கண்டேன் என்னுடையவளை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை இந்த நேரம் இனிப்பது போல எப்போதும் இருப்பாயா? உச்சபட்ச ஆசைகொண்டேனே உன்னிடத்தினிலே வெட்பம் குளிர் எது வந்தாலும் இதமாக இணைப்பாயா? திக்கு-முக்கு ஆடிபோகின்றேன் நீர்வீழ்ச்சியின் நெற்றியின்மீது நிற்க்காமல் பொழிவது போல உன் முத்தம் கொட்டிட வேண்டும் புருவம் தொடங்கி நுனிபாதம்வரை எங்கேயோ பிறந்த என் அன்பே எனை தேடி வந்ததே போதும் இனி வாழும் அத்தனை நாளும் மினுக்கும், மினு-மினுக்குமே வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடி திரிவோம் வா என் துணையே, வழிதுணையே நீயே