Notice: file_put_contents(): Write of 681 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/karaokeplus.ru/system/url_helper.php on line 265
Haji Nagore E. M. Hanifa - Gnanathin Thiravukol | Скачать MP3 бесплатно
Gnanathin Thiravukol

Gnanathin Thiravukol

Haji Nagore E. M. Hanifa

Альбом: Madeenavil Oru Naal
Длительность: 6:50
Год: 1992
Скачать MP3

Текст песни

ஞானத்தின் திறவுகோல்
நாயகம் அல்லவா
நபிநாயகம் அல்லவா
கானத்தில் நான் அதை
கொஞ்சம் இங்கு சொல்லவா

ஞானத்தின் திறவுகோல்
நாயகம் அல்லவா
நபிநாயகம் அல்லவா
கானத்தில் நான் அதை
கொஞ்சம் இங்கு சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்

பள்ளி சென்று படித்ததில்லை
பாடம் ஏதும் கேட்டதில்லை
சொல்லித் தரும் தகுதி இந்த
துன்யாவில் எவர்க்குமில்லை

பள்ளி சென்று படித்ததில்லை
பாடம் ஏதும் கேட்டதில்லை
சொல்லித் தரும் தகுதி இந்த
துன்யாவில் எவர்க்குமில்லை

அல்லாஹ்வே ஆசிரியன்
அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவுகோல்

வானம் அதைப் பார்த்திருந்தார்
வள்ளல் நபி சிந்தித்தார்
கான்மலை கடல் அலையை
கண்டிறையைப் புகழ்ந்திட்டார்
வானம் அதைப் பார்த்திருந்தார்
வள்ளல் நபி சிந்தித்தார்
கான்மலை கடல் அலையை
கண்டிறையைப் புகழ்ந்திட்டார்

இறைவன் சொல்லித் தந்தான்
ஏந்தல் நபி அள்ளிக் கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவுகோல்

ஹீராவெனும் மலைக்குகையே
இளநிலைப் பள்ளிக்கூடம்
சீரான வஹீ மூலம்
சிந்தனையாய் பலப்பாடம்
ஹீராவெனும் மலைக்குகையே
இளநிலைப் பள்ளிக்கூடம்
சீரான வஹீ மூலம்
சிந்தனையாய் பலப்பாடம்

ஜிப்ரீல் ஏந்தி வந்தார்
சாந்த நபி எழுதிக் கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவுகோல்

கலிமா தொழுகை நோன்பு
ஜகாத்து ஹஜ்ஜுடனே
பழுது ஏதுமில்லாத
பண்பான வாழ்க்கை முறை
கலிமா தொழுகை நோன்பு
ஜகாத்து ஹஜ்ஜுடனே
பழுது ஏதுமில்லாத
பண்பான வாழ்க்கை முறை

வகுப்புகள் நடந்தனவே
வாஞ்சை நபி தொடர்ந்தனரே
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவுகோல்

பொருளியல் அரசியலில்
புதுமை விஞ்ஞானமதில்
அருளியல் இல்லறத்தில்
ஆன்மீக வழிமுறையில்
பொருளியல் அரசியலில்
புதுமை விஞ்ஞானமதில்
அருளியல் இல்லறத்தில்
ஆன்மீக வழிமுறையில்

எத்துறையும் கற்றிருந்தார்
ஏகன் அருள் பெற்றுயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவுகோல்

பண்பான நபிபெருமான்
பல்கலைகழகமன்றோ
அன்பான மாணவராம்
அவர் வழி உம்மத் தன்றோ
பண்பான நபிபெருமான்
பல்கலைகழகமன்றோ
அன்பான மாணவராம்
அவர் வழி உம்மத் தன்றோ

தேர்வினிலே வென்றிடுவோம்
தீன் வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே

ஞானத்தின் திறவுகோல்
நாயகம் அல்லவா
நபிநாயகம் அல்லவா
கானத்தில் நான் அதை
கொஞ்சம் இங்கு சொல்லவா

ஞானத்தின் திறவுகோல்
நாயகம் அல்லவா
நபிநாயகம் அல்லவா
ரசூல் நாயகம் அல்லவா
கானத்தில் நான் அதை
கொஞ்சம் இங்கு சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்