Lahilaha Illalla
Haji Nagore E. M. Hanifa
4:43நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ் நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ் வான்மறையை நெஞ்சில் ஏந்தி வாய்மையினை வாழ்வில் ஏந்தி தீர்குலத்து நாயகமே யா ரசூலல்லாஹ் உங்கள் திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ் திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ் வாழும்நெறி வகுத்தளித்து வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து வானம் சென்று இறையை கண்ட யா ரசூலல்லாஹ் உங்கள் வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ் வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ் தேன்சுரக்கும் சுவர்க்கலோகம் தூயவர்கள் வாழும் இல்லம் தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலல்லாஹ் உங்கள் தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ் தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ் அகிலம் தோன்ற ஜீவனாகி ஆண்டவனின் தூதராகி புகழ் உலகில் ஆட்சி செய்யும் யா ரசூலல்லாஹ் உங்கள் புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ் புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ் பாதை மாறிச் சென்றிடாமல் பாதுகாத்து இங்கே எம்மை நீதி கூறும் மறுமை நாளில் யா ரசூலல்லாஹ் நான் நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ் நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ் நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ் நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்