Chinna Chinna Kiliye

Chinna Chinna Kiliye

Hariharan, Anuradha Sriram, & Mahanadhi Shobana

Длительность: 5:36
Год: 1998
Скачать MP3

Текст песни

ஹம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்
அஆ..அஆ...அஆஆ
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ

சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே

பால்சுற்றும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொத்தும் பறவை ஒன்றை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே (ஆஆஆ)
பஞ்சவா்ண கிளியே (ஆஆஆ)

ஆஆ...ஆஆ...ஆஆ..ஆஆ

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண் வாழ்வது கண்ணீரிலா

பாதை கொண்ட மண்ணே
அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே
அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே
அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே
அவளின் உள்ளங்காலை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே

சென்னியதும் உன் திருவடி தாடி சிந்தையுளே
மன்னியதும் திரு மந்திரம் சிந்துர வண்ண பெண்ணே
முன்னியனின் அடி யாருட கூடி  முறை முறையே
கண்ணிய நெஞ்சமும் உந்தன் பரமதவா பக்ததியே

ஆஆ..ஆஆ...ஆஆ
எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நான் ஏறினேன்

கூடு தேடும் கிளியே
அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா

தூரல் போடும் துளியே
உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போன்ற நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே

பால்சுற்றும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொத்தும் பறவை ஒன்றை பார்த்தாயா

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே (ஆஆஆ)
பஞ்சவா்ண கிளியே (ஆஆஆ)