Thaen Thaen Thaen

Thaen Thaen Thaen

Vidyasagar, Udit Narayan, Shreya Ghoshal, And Yugabharathi

Длительность: 3:59
Год: 2008
Скачать MP3

Текст песни

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

என்னவோ சொல்ல துணிந்தேன்
ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத்தானே
நானும் அலைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன்
அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன்
உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும் ரசித்தேன்

உன்னாலே தானே நானும்
என்னை ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஆஆ...ஆஆ....ஆஆ

சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று
நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே
ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
நான் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஏ தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்