Vanna Nilave

Vanna Nilave

Hariharan

Альбом: Ninaithen Vanthai
Длительность: 5:12
Год: 1998
Скачать MP3

Текст песни

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்து போனேன் என் கதி என்ன
மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்