Naan Vaanavillaiyae

Naan Vaanavillaiyae

Hariharan

Альбом: Moovendar
Длительность: 4:58
Год: 1997
Скачать MP3

Текст песни

நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில்
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி
மீட்க என்ன வழியோ

பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்

சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட
மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்