Karu Karu

Karu Karu

Harris Jeyaraj, Karthik, Naresh Iyer, Krish, And Thamarai

Длительность: 3:37
Год: 2007
Скачать MP3

Текст песни

கரு கரு விழிகளால்
ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ
ஒரு மல்லி சரமே
நீ
இலை சிந்தும் மரமே
என்
புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏ
நீ தங்க சிலையா
வெண்
நுரை பொங்கும் மலையா
மன்
மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்

புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே

மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ

தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

நீ
ஒரு மல்லி சரமே
மண்ணில்
இலை சிந்தும் மரமே
மின்னும்
புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏ
நீ தங்க சிலையா
வெள்ளை
நுரை பொங்கும் மலையா
அம்பால்
மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே
தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே
இரவில் இதயம் சாகும்

பேசும் போதே இன்னும்
ஏதோ தேடும்
கையின் ரேகை போலே
கள்ளத்தனம் ஓடும்

நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரை இலை நீர் நீதானா(ஒரு மல்லி சரமே)
தனி ஒரு அன்றில் நீதானா (இலை சிந்தும் மரமே)
புயல் தரும் தென்றல் நீதானா (நீ தங்க சிலையா)
புதையல் நீதானா(மதன் பின்னும் வலையா)

ஒரு மல்லி சரமே