Raja Raja Chozhan
Ilaiyaraaja
4:35அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் புதுமையிலே மயங்குகிறேன் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் லலலலா லாலலால லாலலல லா சிட்டுப் போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போல சீனர் தமிழர் மலாய மக்கள் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும் கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன் சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன்(லாலலால லாலலல)