Kodai Kaala Kaatre (From "Paneer Pushpangal")

Malaysia Vasudevan

Длительность: 5:07
Год: 1981
Скачать MP3

Текст песни

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்