Aagaasa Nilavu (From "Manja Pai")

Aagaasa Nilavu (From "Manja Pai")

N.R. Raghunanthan

Длительность: 4:24
Год: 2015
Скачать MP3

Текст песни

ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல

உன்னை போல அழகுதான்
ஒன்னும் இல்ல உலகிலே
ஒட்டு மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

சாமி கொடுத்த வரமே
நீதானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா

ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல

சூரியன கேளு வாங்கி நான் தருவேன்
சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்

வங்க கடலை நீ சின்ன குவலையில்
மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்
சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்

உலகே அழிஞ்சாலும்
உனை நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன
உன் உருவில் பார்த்திடுவேன்

ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல

எப்போவுமே நீதான் என்னோட ஆவி
பட்டம் பல வாங்கி  ஆகனும் மேதாவி

உன்னை விட ஒரு சொத்து சுகம்
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்
கண்ணு மணியென உன்ன நினைச்சு
நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்

எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்

ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல

உன்னை போல அழகுதான்
ஒன்னும் இல்ல உலகிலே
ஒட்டு மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

சாமி கொடுத்த வரமே
நீதானே எனக்கு ராசா
நின்னு  வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
சாமி கொடுத்த வரமே
நீதானே எனக்கு ராசா
நின்னு  வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா