Maanoothu Mandhaielea (Original Motion Picture Soundtrack)
S. P. Balasubrahmanyam & Sujatha Mohan
5:16கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா தாயி விருமாயி மனசு மருகுதம்மா உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு வண்டிமாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா எட்டுமேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே வண்டிமாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா அண்ணே போய் வரவா அழுது போய் வரவா மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே வண்டிமாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா எட்டுமேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா வண்டிமாடு எட்டு வச்சு (ஆஆ) முன்னே போகுதம்மா (ஆஆ) வாக்கப்பட்ட பொண்ணு மனம் (ஆஆ) பின்னே போகுதம்மா (ஆஆ) எட்டுமேல எட்டு வச்சு (ஆஆ) முன்னே போகுதம்மா (ஆஆ) பொட்டு வெச்ச பொண்ணு மனம் (ஆஆ) பின்னே போகுதம்மா (ஆஆ)