Putham Puthu Kaalai

Putham Puthu Kaalai

S. Janki

Альбом: Alaigal Oyvatillai
Длительность: 4:34
Год: 1981
Скачать MP3

Текст песни

ஆஹாஹாஹா ஆஹாஹா
ஆஹாஹாஹா ஆஹாஹா

புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை பொன்னிற வேளை

அஹ்ஹ் அஹ்ஹ்

வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் சேர்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது

புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

லாலாலா லாலலலாலா லாலாலலா