Athanda Ithanda

Athanda Ithanda

S.P. Balasubrahmanyam

Альбом: Arunachalam
Длительность: 5:38
Год: 2019
Скачать MP3

Текст песни

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா

என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்
ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ

இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா
நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஆஹா

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனித்தனியா கோயில் குளம் அழைவதுவும் எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து
காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு
அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ

தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான்
உன்னை விடமும் எனக்கு வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா