Maya Nadhi

Maya Nadhi

Santhosh Narayanan

Длительность: 4:36
Год: 2016
Скачать MP3

Текст песни

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம்கூடி கண்ணீர் ஆகுதே

நான் உனை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே-தனியே
ஆயிரம் கோடிமுறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில்-பிரிவில்

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும், நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்

ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்சை தர வா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்

மணல் ஊரும் மழையாய்
மடிமீது விழ வா-வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே